4 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர் ஆர்.என்.ரவி..!
4 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருக்கும் அவர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசவும் நேரம் கேட்டு உள்ளார்.
தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு குறித்து கவர்னர் மாதாந்திர அறிக்கை கொடுப்பார் என கூறப்படுகிறது. மேலும் சில சட்ட நிபுணர்களையும் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டெல்லியில் தங்கி இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.