நீலகிரி, உதகைக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி

கவர்னர் வருகை ஒட்டி பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். க

Update: 2023-06-03 15:49 GMT

நீலகிரி,

நீலகிரி மற்றும் உதகைக்கு 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி சென்றுள்ளார். அங்கு நாளை மற்றும் மறுநாள் நடைபெற உள்ள துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்

இந்த மாநாட்டில் புதிய தேசியக் கல்விக் கொள்கை பற்றி, குறிப்பாக இந்திய மொழிகள் மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்க வழிவகை செய்யும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

நீலகிரி மற்றும் உதகைக்கு கவர்னர் வருகை ஒட்டி பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டும் கவர்னர் ஆர்.என்.ரவி இதுபோன்ற மாநாட்டை நடத்தினார். இது அப்போதும் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்