அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-11-07 19:30 GMT

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மண்டல தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். இதில் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 25-ந் தேதி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்