அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்தக்கோரி அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-30 18:11 GMT

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. துணைத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் துணை செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் இளம்பாரதி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்த வேண்டும், தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும், சட்டப்பூர்வ விடுப்பை மறுக்கக்கூடாது, வார விடுப்பில் பணிபுரிய கட்டாயப்படுத்தக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சங்க அலுவலக செயலாளர் பாலு, ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளை துணைத்தலைவர் கோகுல்தாஸ், புதுப்பித்தல் பிரிவு செயலாளர் சாதிக்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்