விஷம் குடித்து அரசு ஊழியர் தற்கொலை

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்து அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-07 21:13 GMT

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே உள்ள மேலூர் மேட்டுத்தெருவில் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த இவர் நீண்ட நாளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, உடனடியாக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுரேஷ்குமாரின் மனைவி நிஷா அளித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்