பெரம்பலூரில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும்-மக்கள் சக்தி இயக்க கூட்டத்தில் வலியுறுத்தல்

பெரம்பலூரில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-06-15 18:16 GMT

பெரம்பலூர் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், இணை செயலாளர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூரில் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் அதிகம் உள்ளன. மருத்துவத்துறையில் அதிக முன்னேற்றம் கண்டுவருவதால், பெண்களுக்கான உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு செவிலியர் பயிற்சிக்கல்லூரி அமைக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர்-கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட தலைநகரங்களை இணைக்கும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, கைகளத்தூர், கூகையூர், கள்ளக்குறிச்சி சாலையை இருவழிச்சாலையாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் நகரில் வீடுகளுக்கு வினியோகம் செய்யும் காவிரி கொள்ளிட குடிநீரை முறையாக சுத்திகரித்து வழங்க வேண்டும். சேலத்தில் இருந்து பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்