மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்தவர் தேன்மொழி (51). இவர் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது உறவினருக்கு வீடு கட்ட விராலிமலை அருகே முல்லையூரை சேர்ந்த சேசுராஜ் (35) என்ற பொறியாளரை அழைத்து அதற்கான பணியை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் சேசுராஜை 4 பேர் தாக்கி உள்ளனர். இது குறித்த புகாரின் ேபரில்மணப்பாறை போலீசார் தேன்மொழி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று தேன்மொழியை போலீசார் கைது செய்தனர்.