கிராம கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவ- மாணவிகள்

நூலகம், விவசாய நிலம், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலாவாக அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Update: 2023-02-02 18:45 GMT


வடவள்ளி

நூலகம், விவசாய நிலம், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலாவாக அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கிராம கல்வி சுற்றுலா

கோவை வடவள்ளி அருகே பொம்மனாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

இங்கு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளை ஒரு நாள் கிராம கல்வி சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி ஆசிரியர் கள் யுவராணி, ஸ்ரீதேவி ஆகியோர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து முதலில் மாணவர்கள் அங்குள்ள நூலகத் துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு, பாடப்புத்தகம் தாண்டி அறிவை வளர்க்கும் புத்தகங்களை படிக்க வேண்டும்.

இதன் மூலம் சமூக, அரசியல், பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.

விவசாயம், ரேஷன் கடை

அதன்பிறகு பொம்மனாம்பாளையத்தில் விவசாய தோட்டங்களுக்கு அழைத்து சென்று பயிர்கள், சாகுபடி, அறுவடை, சந்தைப்படுத்துதல், உணவுச் சங்கிலி போன்றவை குறித்து நேரடியாக காண்பிடித்து விளக்கினர். அப்போது மாணவர்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

இதையடுத்து அங்குள்ள ரேஷன் கடையின் செயல்பாடு, பொருட்கள் வினியோகம், மத்திய, மாநில அரசு மானியம், ஸ்மார்ட் கார்டு என்றால் என்ன?. மக்கள் அடையும் பயன்கள் குறித்து மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.

பூங்காவில் மகிழ்ச்சி

அங்கிருந்து மாணவர்கள் குமாரசாமி நகரில் உள்ள பூங்காவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு மாணவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த ஒரு நாள் பயிற்சி மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்தியதோடு, சமூகத்தில் மக்களின் வாழ்வியலையும் அறிந்து கொள்ள உதவும் என்று ஆசிரியர்கள் கூறினர்.

பள்ளிக்கூட வகுப்பறையை தாண்டி ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்று பல்வேறு அம்சங்கள் குறித்து அறிந்து கொண்ட மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

ஒரே நாளில நிறைய தகவல்களை அறிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டதாக மாணவ -மாணவிகள் கூறினர்.

மேலும் செய்திகள்