அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி

Update: 2022-11-22 18:45 GMT

உசிலம்பட்டி

மதுரை மண்டல அளவிலான குத்து சண்டை போட்டி நாகமலைபுதுகோட்டை ஜெயராஜ் நாடார் பள்ளியில் நடைபெற்றது. இதில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 வயது பிரிவில் 54 முதல் 57 கிலோ எடைபிரிவில் எஸ்.நவீன்குமார் முதலிடமும், 66 கிலோ எடைபிரிவில் ஈஸ்வரபாண்டி முதலிடமும், 80 கிலோ எடைபிரிவில் நிவேக் முதலிடமும், 70 கிலோ எடைபிரிவில் நதீஷ் இரண்டாம் இடமும், 60 கிலோ எடைபிரிவில் மனோஜ் மூன்றாம் இடமும், 19 வயது பிரிவில் 49 கிலோ எடைபிரிவில் எல்.அருண்பாண்டி முதலிடமும், 60 முதல் 64 கிலோ பிரிவில் எடைபிரிவில் நவீன் முதலிடமும், சடையாண்டி 2-வது இடமும், 69 முதல் 75 கிலோ எடைபிரிவில் குகன் இரண்டாம் இடமும் பெற்றனர். தடகள போட்டியில் பி. நதீஷ் முதலிடமும், எல்.அருண்பாண்டி இரண்டாம் இடமும், சரவணகுமார் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழ் ஆசிரியர் சண்முகராஜன் வரவேற்றார். எழுமலை சப்- இன்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆசிரியர் தியாகு நன்றி கூறினார். வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சிவக்குமார், விக்னேஷ்வரன் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் மோகன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி உதவி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் பாராட்டினர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்