அரசு பள்ளி மாணவன் சாதனை
ஓவிய போட்டியில் முனைஞ்சிப்பட்டி அரசு பள்ளி மாணவன் சாதனை படைத்தான்
இட்டமொழி:
சென்னை பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் எரிசக்தி சேமிப்பு குறித்த மாநில அளவிலான விழிப்புணர்வு ஓவிய போட்டி சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டிக்கு 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் முனைஞ்சிப்பட்டி குருசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கோசல்ராம் வரைந்த ஓவியத்துக்கு சிறப்பு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
பரிசு தொகையாக ரூ.7,500, சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.2,000, மேலும் ரூ.3,000 மதிப்புள்ள ஓவிய சாதனங்களை தேசிய எரிசக்தி மண்டல மேலாளர் தருண் பஜாஜ் வழங்கினார்.
சாதனை படைத்த மாணவனை பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தை தெரஸ், ஓவிய ஆசிரியர்கள் ஞானசேகர், சேர்மதுரை, பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.