மின் வாரிய ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம்
மின் வாரிய ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் நடந்தது.
கரூரில் மின்வாரிய ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் மின் பகிர்மான வட்டத்தில் கரூர் நகரிய கோட்டத்தில் செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தலைமையில் மின்வாரிய ஊழியர்களுக்கான சிறப்பு கூட்டம் தாந்தோணிமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வாட்ஸ்-அப், டிவிட்டர் செயலி, மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து மின்வாரியதுறை சார்ந்த அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மின்வாரியத்தால் செயல்படுத்தப்படும் அனைத்து விரிவாக்க பணிகளை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் பார்வைக்கு எடுத்து சென்று வாரியத்தின் நற்பெயரை காக்க வேண்டும். விபத்தில்லாமல் பணி செய்ய கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இதில் மின்வாரிய ஊழியர்கள் 214 பேர் கலந்து கொண்டனர். மேலும் கோட்ட அளவில் பாதுகாப்பு வகுப்பு நடத்தப்பட்டது.