அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வாசுதேவநல்லூர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-06 12:05 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1989-1990-ம் ஆண்டு பிளஸ்-2 கலைப்பிரிவு படித்த மாணவ- மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர் அருண் மற்றும் பன்னீர்செல்வம் வரவேற்பு நிகழ்த்தினர்.

தற்போதைய அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முத்துராஜ், வக்கீல் செந்தில், சாகுல்அமீது, இசக்கிராஜா, பாலமுருகன், சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்