அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

Update: 2023-01-01 12:06 GMT

குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி கல்மடுகு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு வாரம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்விசிவகுமார், சூரியகலா மனோஜ்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நித்யாவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம், அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்