அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

திண்டுக்கல்லில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-27 19:30 GMT

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நேற்று மாநிலம் முழுவதும் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என 110 பேர் நேற்று பணிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர். இதனால் அந்தந்த அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்