பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் போராட்டம்-அலுவலக பணிகள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் போராட்டம்-அலுவலக பணிகள் பாதிப்பு

Update: 2023-05-12 01:00 GMT

கோத்தகிரி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தங்களது 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், விடுமுறை தின, இரவு நேர, வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகளைக் கைவிடுதல், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட மருத்துவ விடுப்பு. ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வுநிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல், கணினி ஆபரேட்டர்களை பணிவரன்முறை செய்தல், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், அவுட் சோர்சிங் முறையை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊரக வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 36 பேர் நேற்று ஒருநாள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அலுவலர்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்