அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கடலூரில் அரசு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்:
டாஸ்மாக்கில் வெள்ளை அறிக்கை கேட்ட சங்க தலைவர் சரவணன் மீதான தற்காலிக பணிநீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும், சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்காமல் ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களை அவமானப்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் ஊராட்சி ஒன்றிய சத்துணவு பணியாளர்களை ஆய்வுக்கூட்டத்தில் காலம் கடந்து இரவு வீட்டுக்கு அனுப்பும் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர் சரவணன், பிரசார செயலாளர் சுகமதி, ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா, மாவட்ட தலைவர் தங்கராஜ், செயலாளர் செல்வராஜ், வட்டார தலைவர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.