அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-27 16:10 GMT

பாப்பிரெட்டிப்பட்டி,:

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பட்டுகோணாம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆலமரத்தூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய கூட்டம் ஊர் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, சண்முகம் பழனி, மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் அம்புரோஸ் வரவேற்றார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளர் கண்ணகி, மாவட்ட செயலாளர் மல்லையன், வட்ட செயலாளர் தனுஷன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பொன்னுசாமி, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தீர்த்தகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு நிர்வாகிகள் வஞ்சி, சேகர், மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு சொக்கலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் வாணியாறு நீர்த்தேக்க திட்டத்திற்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் நிலங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும். வாணியாறு நீர்தேக்க பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து தரவேண்டும். முள்ளிகாடு கிராம மக்கள் மயானத்திற்கு செல்ல பாலம் கட்டித்தர வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடந்்து 13 பேர் கொண்ட சங்க நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்