அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுயாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அரசாணை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விரிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றி, எழுத்துத் தேர்வு முறையை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சட்டக் கல்லூரிகளில் வழங்குவது போல் வழங்க வேண்டும். மாநில தகுதித் தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக்கு வெளியே இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.