கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இரவு 8 மணிக்கு பிறகு நிறுத்தம்

மாவட்டம் முழுவதும், 3-வது நாளாக கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இரவு 8 மணிக்கு பிறகு நிறுத்தம்

Update: 2023-07-30 18:45 GMT

கடலூர்

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை வௌியேற்றக்கோரி நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் கடந்த 28-ந்தேதி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் மீது கல் வீசி தாக்கி, அவர்களின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு பிறகு கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. நேற்று முன்தினமும் இரவு நேரங்களில் கிராமப்புறங்களுக்கு சென்ற அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டது.

நேற்றும் 3-வது நாளாக மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களுக்கு செல்லும் 120 அரசு பஸ்கள் இரவு 8 மணிக்கு பிறகு நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் ஏறி சென்றனர். கடலூரில் இரவு 8 மணிக்கு பிறகு வேலைக்கு சென்று வீடு திரும்புவோர், அரசு ஊழியர்கள் என அனைவரும் முண்டியடித்தபடி தனியார் பஸ்களில் ஏறி சென்றனர். சில பஸ்கள் மெயின்ரோடு வழியாக சென்றாலும், கிராமப்புற பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். நகர்ப்புறங்களுக்கு மட்டும் போலீசாரின் அறிவுரையின் பேரில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்