கடலூரிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தம்.!

கடலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-07-29 14:41 GMT

கோப்புப்படம் 

கடலூர்,

நெய்வேலியில் நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து, கடலூரின் பல பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 26 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கடலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காயமடைந்துள்ளனர். சாத்தப்பாடியில் நிகழ்ந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பான புகாரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்