செம்மனாரைக்கு அரசு பஸ் இயக்கம்

கோத்தகிரியில் இருந்து செம்மனாரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

Update: 2023-04-16 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே குஞ்சப்பனையையொட்டி கோழிக்கரை, செம்மனாரை, கீழ்கூப்பு உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால், கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக குஞ்சப்பனைக்கு பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். இதனால் பஸ் வசதி வேண்டும் என பழங்குடியின மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து குஞ்சப்பனையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மனாரைக்கு கடந்த மாதம் 5-ந் தேதி அரசு பஸ் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அந்த வழித்தடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்கள் அகற்றப்பட்டு, தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. தினமும் 3 முறை இயக்க போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இந்தநிலையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து செம்மனாரைக்கு அரசு பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அந்த பஸ் செம்மனாரை சென்றதும், கிராம மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்