தேவதானப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
தேவதானப்பட்டி அருகே அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது
திருச்சியில் இருந்து குமுளிக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. தேவதானப்பட்டியை அடுத்த புல்லக்கா பட்டி பிரிவு அருகே வந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார் பஸ் டிரைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த டிரைவர் பஸ்சை எடுத்து சென்றார். இதுகுறித்து கண்டக்டர் லோகநாதன் கொடுத