விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியை சேர்ந்தவர் சீனிவாசராகவன் (வயது 52). இவர் விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த தொழிற்சங்க போராட்டத்தில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதி அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி சித்ரா (42) கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.