அரசு பஸ் டிரைவர் தற்கொலை
ஆனைமலை அருகே அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த பெரியபோது பகுதியைச் சேர்ந்தவர் சிவ ஞானசேகர் (வயது 44), அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி சபி (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சிவஞானசேகர் பொள்ளாச்சி-கிழவன்புதூர் செல்லும் பேருந்து இயக்கி வருகிறார். இரவு நேரத்தில் பெரியபோதுவுக்கு வரும்போது, சிவஞானசேகர் மனைவி சாப்பாடு கொண்டு வந்து கொடுப்பது விடுவது வழக்கம்.
சம்பவத்தன்று சாப்பாடு கொடுக்க வந்த சபி, டிசர்ட், பேண்ட் அணிந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவஞானசேகர் தனது மனைவியிடம் பேசவில்லை. இந்த நிலையில் பணி முடிந்து வந்து வீட்டிற்கு வந்த அவர் திடீரென தனது அறையை பூட்டிக்கொண்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.