அரசு பஸ் மோதி புது மாப்பிள்ளை பலி

அரசு பஸ் மோதி புது மாப்பிள்ளை பலி

Update: 2022-06-22 19:41 GMT

மானாமதுரை

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் ராசுகுட்டி (வயது 30). இவர் மதுரையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். நேற்று சிவகங்கையில் இருக்கும் மனைவி கலைச்செல்வியை பார்க்க மதுரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சிவகங்கை அருகே நல்லாகுளம் என்ற இடத்தில் வரும் போது அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் ராசு பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது.

Tags:    

மேலும் செய்திகள்