'அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக நிர்வாகம் நடத்தக் கூடாது' - மதுரை ஐகோர்ட்டு கிளை

அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்கானது மட்டும்தான் என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

Update: 2023-10-27 23:29 GMT

மதுரை,

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியை கல்யாணி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், தென்காசி மாவட்டம், இலஞ்சியில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் 1994-ம் ஆண்டில் இருந்து ஆசிரியையாக பணியாற்றி வரும் தன்னை நிரந்தர ஆசிரியை பணியிடத்தில் நியமிக்காமல் வேறொருவரை நியமித்திருப்பதாகவும், இந்த நியமனத்தை ரத்து செய்து தனக்கு நிரந்தர பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, மனுதாரருக்கு தகுதி இல்லை எனக் கூறி, ஊக்கத் தொகை, பதவி வழங்க பள்ளி நிா்வாகம் மறுத்துள்ளது பாரபட்சமானது என்று தெரிவித்தார். எனவே, மனுதாரருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட முதுநிலை உதவி ஆசிரியையின் நியமனத்தை ரத்து செய்து, அந்த பணியிடத்தில் மனுதாரரை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக நிர்வாகம் நடத்தக் கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதி, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்கானது மட்டும்தான் எனவும், நிா்வாகம் முறையாக நடைபெறவில்லையெனில், இவற்றுக்கு வழங்கப்பட்ட மானியத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்