திருச்செங்கோடு அருகே கோர விபத்து; புது பெண் உட்பட 3 பேர் பலி..!

திருச்செங்கோடு அருகே பைக் மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2022-08-31 10:12 GMT

நாமக்கல்:

திருச்செங்கோடு வேலூர் செல்லும் ரோட்டில் புளியம்பட்டி சுரக்கா தோட்டம் பிரிவு அருகில் திண்டுக்கல்லை சேர்ந்த சுரேஷ் (வயது 35), சுப்பிரமணி (50) ஆகிய இருவரும் வேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் திருச்செங்கோடு நெய்க்காரப்பட்டி சேர்ந்த சிவசக்தி நகர் ராமகிருஷ்ணன் (29) என்பவர் வேலூர் நோக்கி பொலிரோ வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பைக்கும் காரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காரில் வந்த ஜீவிதா (21) என்பவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் திருமணமான இரண்டே நாளில் கணவன் கண்முன்னே புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்