அத்தியூர்கோபாலகிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேகம்
அத்தியூர் கோபாலகிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த அத்தியூர் கிராமத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத கோபால கிருஷ்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோவிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று காலை கோ பூஜை, மூல மந்திர யாகம், சாந்தி யாகம் உள்ளிட்டவை நடந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது.
அதை தொடர்ந்து, ருக்மணி சத்யபாமா சமேத கோபால கிருஷ்ணசாமி கோவில் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் செஞ்சி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட யாதவ மகாசபை மற்றும் கிராம யாதவ குல மக்கள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சாமிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், இரவு சாமி வீதி உலாவும் நடைபெற்றது.