குட்ஷெப்பேடு மெட்ரிக் பள்ளி பட்டமளிப்பு விழா

ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் பள்ளி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-04-02 18:45 GMT

கடையம்:

ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எல்.கே.ஜி. மாணவி ஹமீதா வரவேற்றார். அதனை தொடர்ந்து கே.ஜி. மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அம்பை சிவில் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் பாத்திமா ஜூவேரியா கலந்துகொண்டு கே.ஜி. மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். நெல்லை லிட்டில் பிளவர் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஆன்டோ ஜோசெல்வகுமார் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா மாணவர்களுடன் கலந்துரையாடினார். பள்ளியின் தாளாளர் ஆன்டனி பாபு தலைமை தாங்கினார். முடிவில் எல்.கே.ஜி. மாணவன் நிதின் தேவ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை மீராள் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்