சரக்கு ஆட்டோவுக்கு மர்மநபர்கள் தீ வைப்பு

சரக்கு ஆட்டோவுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர்.

Update: 2022-11-10 17:51 GMT

வேலூர் கஸ்பா பெரிய மசூதி தெருவை சேர்ந்தவர் அகமது. அந்தப் பகுதியில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை கஸ்பா பெரிய மசூதி அருகே நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் இந்த சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்துள்ளனர்.

இதில் சரக்கு ஆட்டோ முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனை கண்ட பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் சரக்கு ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்