சிறந்த கல்வியின் மூலம் நல்ல வேலைவாய்ப்ைப பெறலாம்

சிறந்த கல்வியின் மூலம் நல்ல வேலைவாய்ப்ைப பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

Update: 2023-01-09 19:14 GMT

திருச்சுழி, 

சிறந்த கல்வியின் மூலம் நல்ல வேலைவாய்ப்ைப பெறலாம் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

திறப்பு விழா

திருச்சுழி கேத்தநாயக்கன்பட்டியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பயிற்சியாளர்களுக்கு சேர்க்கை ஆணையினை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 4-வது அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திருச்சுழியில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கு நிலஅளவையாளர், மின்சாரப்பணியாளர், எந்திர வேலையாளர், கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு 112 இடங்கள் உள்ள நிலையில் தற்போது வரை 64 பயிற்சியாளர்கள் சேர்ந்துள்ளனர்.

கல்வித்தரம்

இங்கு தொழிற்பயிற்சி நிலையம், கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் மற்றம் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இன்றைய காலக்கட்டத்தில் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த தொழிற்பயிற்சி நிலைய கட்டிடம் விரைவாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இந்த தொழிற்பயிற்சி நிலையத்தை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் அரசினர் கலைக்கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் அமைந்து இருப்பது இப்பகுதி ஏழை, எளிய மாணவர்களின் கல்வித்தரம் உயர உதவியாக இருக்கும்.

வேலைவாய்ப்பு

மாணவர்கள் சிறப்பாக கல்வி பயின்று எதிர்காலத்தில் நல்லதொரு வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வக்குமார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ கல்யாணக்குமார், திருச்சுழி ஒன்றியக்குழுத்தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் போஸ், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், சுபாஷ் சந்திரபோஸ், திருச்சுழி தாசில்தார் பாண்டிசங்கர், அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்