கலிதீர்த்த அய்யனார் கோவிலில் தங்க குதிரை எடுக்கும் திருவிழா

ஆயக்காரன்புலம் கலிதீர்த்த அய்யனார் கோவிலில் தங்க குதிரை எடுக்கும் திருவிழா நடந்தது.

Update: 2023-04-15 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இக்கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக குதிரை சிலை வைப்பது வழக்கம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் சிலைக்கு வண்ணம் பூசப்பட்டது. இதை தொடர்ந்து தங்ககுதிரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது. ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோவிலில் இருந்து குதிரையாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக வந்து கலிதீர்த்த அய்யனார் கோவிலை வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் வழிநெடுகிலும் பக்தர்கள் தங்ககுதிரைக்கு மாலை அணிவித்தனர் பின்பு கலிதீர்த்த அய்யனாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. இரவு வாணவேடிக்கையும் அன்னதானமும் நடந்தது.. இதில்ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அருள்வாக்கு சித்தர் கலிதீர்த்தான் சாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்