சென்னை விமான நிலையத்தில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - வாலிபர் கைது

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-12-16 14:33 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது பேண்ட்டில் ரகசிய அறையில் வைத்து இருந்த 3 தங்க செயின்களும் உள்ளாடைக்குள் தங்கத்தை வைத்து இருந்ததையும் கண்டுபிடித்தனர். ரூ. 86 லட்சத்தி 27 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 774 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் வாலிபரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்