4 பவுன் நகை திருட்டு
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 4 பவுன் நகையை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிக்கல்;
நாகை அருகே பொரவச்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது68). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் கடந்த 2-ந் தேதி இரவு தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை தனது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தியாகராஜன் கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.