இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.1.59 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் - பெண் கைது

கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2022-06-22 18:22 GMT

சென்னை,

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த ஜெசிந்தா மேரி பிரான்சிஸ் என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அந்த பெண் தனது ஆடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்து 1 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 400 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த சுங்கத்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்