சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்
சீர்காழி:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தி.மு.க. சீர்காழி நகர இளைஞரணி சார்பில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.ஆர்.ஆர். ராஜசேகரன் வரவேற்று பேசினார். இதில் பன்னீர்செல்வம்
எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். மேலும் 27 குழந்தைகளுக்கு பால், பிரட், கிப்ட் பாக்ஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் பன்னீர்செல்வம், நகரமன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ஜெயந்தி பாபு, நகர பொருளாளர் கோடங்குடி சங்கர், நகர இளைஞரணி நிர்வாகிகள் பிரவீன், ரத்தினசாமி, ஆனந்தராஜ், கார்த்திக், ஸ்ரீராம், சல்மான், அஷிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.