அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.

Update: 2022-11-28 18:45 GMT

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தென்காசி தெற்கு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த குழந்தைகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தென்காசி, பாவூர்சத்திரம், ஆவுடையானூர், அரியப்பபுரம், கடையம், கரும்பனூர், ஆலங்குளம், இலஞ்சி அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று முன்தினம் பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நேற்று வழங்கினார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, தென்காசி நகர்மன்ற முன்னாள் தலைவர் கோமதிநாயகம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பாலாமணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, தென்காசி யூனியன் முன்னாள் தலைவி தமிழ்ச்செல்வி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்