அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நெல்லை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன் ஏற்பாட்டில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், வடக்கு விஜயநாராயணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான இ.நடராஜன் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் தலைவர் தங்கப்பாண்டியன் நேற்று பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காசிராஜன், அரசு ஒப்பந்ததாரர் இ.என்.மனோஜ், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் இசக்கிப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள கண் பார்வையற்றோர் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு இலவச சேலை மற்றும் உணவு பொருட்களை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இ.நடராஜன் வழங்கினார்.