அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்
அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்கமோதிரம்
விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அல்லம்பட்டியில் பா.ஜ.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விருதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ரத்ததான முகாமில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் உள்பட 47 பேர் ரத்ததானம் செய்தனர். இதனையடுத்து கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 9 குழந்தைகளுக்கு பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி தங்க மோதிரங்களை பரிசாக அணிவித்தார்.