தங்கம் விலை மேலும் சரிவுபவுன் ரூ.42,352-க்கு விற்பனை
நாமக்கல்லில் தங்கம் விலை மேலும் குறைந்து பவுன் ரூ.42,352-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 20-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.5,625-க்கும், ஒருபவுன் ரூ.45 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது. அது படிப்படியாக குறைந்து கடந்த 30-ந் தேதி ஒரு கிராம் ரூ.5,375-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இதற்கிடையே கடந்த 2-ந் தேதி பவுனுக்கு மேலும் ரூ.600 குறைந்தது. இந்த நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.48 குறைக்க நகர ஷராப் வர்த்தகர் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. எனவே ஒருபவுன் விலை ரூ.42,352 ஆக சரிவடைந்து உள்ளது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் எதுவும் நடைபெறுவது இல்லை இதுவே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.