தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு...!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

Update: 2022-12-15 05:35 GMT



சென்னை,

சென்னையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 ஆயிரத்தை தாண்டியது. நேற்று முன்தினம் பவுன் ரூ.40,320-க்கு விற்ற தங்கம் நேற்று அதிரடியாக உயர்ந்து ரூ.40,800-க்கு விற்பனை ஆனது. பவுன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியதால் நகை வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் பவுன் ரூ.320 குறைந்து ரூ.40,480-க்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.5100-ல் இருந்து ரூ.5060-ஆக குறைந்து உள்ளது. கிராம் இன்று ரூ.40 குறைந்து இருக்கிறது. தங்கத்தை போல வெள்ளி விலையும் சரிந்து உள்ளது. கிராம் ரூ.74-ல் இருந்து ரூ.72.70 ஆகவும். கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.72,700 ஆகவும் குறைந்து விற்பனை ஆகிறது.

Tags:    

மேலும் செய்திகள்