ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.80 உயர்வு
இன்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 610-க்கும், ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை,
தங்கம் விலை கடந்த 1-ந்தேதியில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதன்படி, கடந்த 3-ந்தேதி விலை அதிகரித்தும், அதற்கு மறுநாள் விலை குறைந்தும் இருந்தது. நேற்று விலை மாற்றம் இல்லாமல் இருந்து, இன்று உயர்ந்திருந்தது. அதன்படி, நேற்று ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 600-க்கும், ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
இன்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 610-க்கும், ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 87 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.87 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.