சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் தங்கப்பதக்கம்

பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் 16 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

Update: 2022-12-08 18:33 GMT

பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் 16 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

3 தங்கப்பதக்கம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-22-ம் ஆண்டு தேர்வுகளில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் தங்கப்பதக்கங்கள் உள்பட 19 பேர் தரவரிசையில் சிறப்பிடங்களை பெற்றுள்ளனர். இளநிலை பட்ட வகுப்புகளில் சர்வதேச வணிகவியல் துறையில் எஸ்.பிரபாகரன் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இதே துறையில் கே.பிரவீன்குமார் 6-வது இடம் பெற்றுள்ளார். வரலாறு துறையில் பாண்டி செல்வி 3-வது இடம், ஆர்.அகில் பிரசாத் 3-வது இடம், கோபிநாத் 6-வது இடம், ஆர்.அருள்குமார் 10-வது இடம் பெற்றுள்ளனர்.

முதுநிலை பட்ட வகுப்புகளில் ஆடை வடிவமைப்பு நாகரிகம் துறையில் எஸ்.வாணிஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வேதியியல் துறையில் ஆர்.திவ்யா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இதே துறையில் சி.நாககார்த்திகா 4-வது இடமும், எஸ்.ஹரிகரன் 5-வது இடம், வானிலன் 6-வது இடம், சிவசக்தி 7-வது இடம், கவிப்பிரியா 8-வது இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

ஆங்கில இலக்கிய துறையில் மனோஜ் 6-வது இடம், சர்வதேச வணிகவியல் துறையில் லின்சி இவாஞ்சலின் 4-வது இடம், சுரேஷ் 5-வது இடம், பிரேம்குமார் 9-வது இடம் பெற்றனர். இயற்பியல் துறையில் மோனிஷா 6-வது இடம் பெற்றுள்ளார். விலங்கியல் துறையில் பத்மஸ்ரீ 6-வது இடம் பிடித்தார்.

பாராட்டு

கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், வேதியியல் துறை தலைவர் ராஜகோபால், சர்வதேச வணிகவியல் துறை தலைவர் மல்லேஸ்வரன், ஆடை வடிவமைப்பு நாகரிகம் துறை தலைவர் கற்பகம் சின்னம்மாள், வரலாறு துறை தலைவர் சங்கமேஸ்வரன், இயற்பியல்துறை தலைவர் ஹரேஸ் பண்டியா, விலங்கியல்துறை தலைவர் மார்க்ரெட், ஆங்கில இலக்கியத்துறை தலைவர் பிருந்தா, கல்லூரி ஆட்சிக்குழுவினர், அனைத்து துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்