இந்தோ-நேபாள் ஸ்கேட்டிங் போட்டி: கிருஷ்ணகிரி மாணவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை
கிருஷ்ணகிரி
நேபாளத்தில் நடைபெற்ற இந்தோ நேபாள் ஸ்கேட்டிங் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாரத் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் மாஸ்டர் ரஹமத் தலைமையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர் நேஷனல் பள்ளி 3-ம் வகுப்பு மாணவர் ஹரிமித்ரன் பங்கேற்று கிராண்ட் சாம்பியன் ஷிப் பட்டமும், ரிங் 1-ல் தங்கப்பதக்கமும், ரிங் 2-ல் தங்க பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
மேலும் இந்தோ நேபாள் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற ஹரிமித்ரன் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். சாதனை படைத்த ஹரிமித்ரனை நாளந்தா இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர், முதல்வர், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற ஹரிமித்ரன் கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் இயங்கி வரும் குமார்-ன் வெங்கடேஸ்வரா ஜூவல்லரியின் உரிமையாளர் பலராம் ஜே.பாலாஜி-திவ்யா தம்பதியின் மகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.