பள்ளி மாணவியிடம் தங்க சங்கிலி பறிப்பு

பள்ளி மாணவியிடம் தங்க சங்கிலி பறிப்பு

Update: 2023-07-19 19:00 GMT

பெ.நா.பாளையம்

பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோடு ராமகிருஷ்ணா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40), இவருடைய மனைவி சசிகலா (37). இவர்களது மகள் சுவேதா (16). இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் சம்பவத்தன்று சுவேதா வீட்டின் அருகே உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி மாணவியிடம் முகவரியை காண்பித்து, எங்குள்ளது என்று கேட்டுள்ளார்.

திடீரென அந்த ஆசாமி கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பள்ளி மாணவியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்