2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு
2 பெண்களிடம் தங்க சங்கிலி களை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றுவிட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம்.ஐ.டி. கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள் (வயது 80). இவர் நேற்று காலை குண்டூர் எம்.ஐ.டி. கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஆரோக்கியம்மாள் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டான். இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர். இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல் நகரை சேர்ந்தவர் முத்து வெள்ளை. இவரது மனைவி இந்திரா (58). இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள மாவு அரைக்கும் ஆலைக்கு நடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி அவரது கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றான். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிைய தேடி வருகின்றனர்.