நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

சுவாமிமலை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-06-21 20:15 GMT

கபிஸ்தலம்;

சுவாமிமலை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சங்கிலி பறிப்பு

சுவாமிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவீ. கண்ணன். இவருடைய மனைவி சரண்யா (வயது28). சம்பவத்தன்று இவர் தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீ்ட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென சரண்யா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா இதுகுறித்து சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்