கத்தியை காட்டி மிரட்டி பெண்களிடம் சங்கிலி பறிப்பு

பட்டுக்கோட்டை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்களிடம் சங்கிலி பறித்த டவுசர் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறாா்கள்.

Update: 2023-02-01 21:25 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை அருகே கத்தியை காட்டி மிரட்டி பெண்களிடம் சங்கிலி பறித்த டவுசர் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறாா்கள்.

டவுசர் கொள்ளையர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கீழ செம்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர் குலோத்துங்கன். விவசாயி. இவருடைய மனைவி சந்திரகலா (வயது41). இவரும் இவருடைய இரண்டு மகள்களும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அவருடைய வீட்டின் அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்திரகலா தனது மகள்களுடன் அங்கு சென்று டார்ச் அடித்து பார்த்தாா். அப்போது அங்கு டவுசர் அணிந்த 3 மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கண்டவுடன் சந்திரகலா மற்றும் அவரது மகள்கள் கூச்சலிட்டனர்.

சங்கிலி பறிப்பு

ஆனால் அதற்குள் மா்ம நபர்கள் கத்திைய காட்டி மிரட்டி சந்திரகலாவின் மகள்கள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனா்.இது குறித்து சந்திரகலா பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்