வீட்டிலேயே உருக்கி பிஸ்கட்,
நாணயங்களாக மாற்றிய கொள்ளையன்
அவினாசி பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் அவினாசி போலீசார் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 98 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராஜசேகரன் என்பவர் மீது திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 30 திருட்டு வழக்குகள் உள்ளன.
மேலும் இவர் திருடிய நகைகளை உருக்குவதற்காக தனது வீட்டிலேயே எந்திரத்தை வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருடிய நகைகளை அந்த எந்திரத்தின் மூலம் உருக்கி பிஸ்கட் மற்றும் நாணயம் வடிவில் மாற்றியுள்ளார். மேலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சிலரை தனது நண்பர்களாக்கி தனது திருட்டு தொழிலுக்கு உதவியாக வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. தனக்கு வேறு தொழில் தெரியாது, திருட்டு தான் எனது தொழில் என்று கூறி போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.