அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன்நகை, ரூ.40 ஆயிரம் திருட்டு
அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன்நகை, ரூ.40 ஆயிரம் திருட்டு
அவினாசி
கோவையில் இருந்து ஈரோடு சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 15 பவுன்நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருட்டுப்போனது.
நகை, பணம் பறிப்பு
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கோவையை சேர்ந்த புவனேஸ்வரி (வயது 35) பயணம் செய்தார். இவர் 3 பேர் அமரும் இருக்கையில் அமர்ந்து இருந்தார். இவர் கையில் உள்ள பையில் 15 பவுன்நகையும், ரூ.40 ஆயிரமும் வைத்திருந்தார். இவர் பயணம் செய்த பஸ் கருமத்தபட்டியில் நின்றது. அப்போது 2 பெண்கள் பஸ்சில் ஏறினர். அவர்களில் ஒரு பெண் கைக்குழந்தை வைத்திருந்தார்.
இதையடுத்து இருக்கையில் அமர்ந்து இருந்த புவனேஸ்வரி, கனிவு கொண்டு தனது இருக்கையை விட்டு எழுந்து கைக்குழந்தை வைத்திருந்த பெண்ணுக்கு இருக்க இடம் கொடுத்தார். இதையடுத்து அந்த பெண் இருக்கையில் அமர்ந்து கொண்டார். புனவேஸ்வரி எழுந்து நின்றார். அவரது அருகே மற்றொரு பெண் உரசிக்கொண்டு நின்றிருந்தார். அப்போது புவனேஸ்வரியின் செல்போன் ஓலித்தது. அந்த போனை எடுத்து புவனேஸ்வரி பேசினார்.
நகை, பணம் திருட்டு
பின்னர் அவினாசி பஸ் நிறுத்தம் வந்ததும் புவனேஸ்வரி பஸ்சை விட்டு இறங்கினார். பின்னர் தான் வைத்திருந்த பையில் நகை, பணம் உள்ளதா? என்று பார்த்தார். அப்போது கைபையின் ஜிப் லேசாக திறந்து இருந்தது. பையின் ஒரு பகுதி பிளேடால் கீறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி பதற்றத்துடன் பையை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. அவை திருட்டு ேபாயிருந்தது. இது குறித்து அவினாசி போலீசில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.